Saturday, January 12, 2008

எல்லாமே முடிஞ்சு போய்ச்சு..

பின் இரவின் கருக்களினூடாய்
ஆந்தையின் மரணச்செய்தி கேட்டேன்.


என் இருதயத்தில் அடிக்கடி மோதிவிடும்
ஒரு சுவாசத்திற்கான படியாய்
இந்த ஆந்தையின் அலறல் விழும்.
என் இரவுகளின் கடத்துகைக்கு
மிக உட்சாகமாய் துணைவருவதும் இதுவே.

ஆனால்,

இறைவனின் விதிக்கோலங்களில்
வாழ் நாட்களிற்கான இணைபாடியாய்
இணைந்த அலறல்களுடன் வாழ்ந்தோம்.
அன்பின் மையச்சுவையின் திளைத்தலில்
பல நூறு காலம்
உயிர்ப்புப்பெற்ற ஆந்தைகளாய் இருந்தோம்.

சற்றென்று,
எங்களின் வாசஸ்தளத்தில்
மிகப் பெரியதொரு விண்கல் விழுந்து
நூற்றாண்டுகால மரக்கிளை மாளிகையை
அடையாளமின்றி துவைத்துவிட்டது.


அன்று அலைந்த ஆந்தையின்
மரணச்செய்தி இன்று கேட்டது.

நிமிர்ந்தும் பார்க்க முடியாமல்
என்னை விட்டுச்சென்றது அலறும் ஆந்தை.

எல்லாம் முடிஞ்சு போய்ச்சு..

01.01.2008

7 comments:

ஃபஹீமாஜஹான் said...

பர்ஸான்
கிழக்கின் கவிதை மொழியிலிருந்து உங்களை விடுவித்துக் கொண்டு மிகச் சிறப்பான எதிர்காலத்தைக் கட்டியம் கூறியவாறு கவிதையை எழுதியுள்ளீர்கள்.

எந்தக் கவிஞரின் பாதிப்புக்கும் உற்படாதவாறு உங்களுடைய கவிதை இன்றைய கவிதையின் செல்நெறியுடன் இணைந்து செல்கிறது.

எழுத்தில் முதிர்ச்சி தெரிகிறது.உங்கள் பயணம் சிறப்பாகவே அமையும்.

பஹீமாஜஹான்

farzan abdul razeek said...

நன்றி தோழர்,
இவ்வாறு வரவேண்டும் என்ற எந்த நிலைகளையும் முன்னே நிறுத்திக்கொண்டு எப்படி எழுத முடியும். அப்போதய உணர்வின் வழியே அவை கிடக்கட்டும். நாமென்ன ஆசான்களா/ வானம்பாடிகளா?. எழுதாமல் விடுபட்ட எத்தனையோ பதிவுகள் முன் எந்த முகத்துடன் நிற்கப்போகிறோம்.

நன்றிகள்,
பர்ஸான்.ஏஆர்.

மாயா said...

அருமை !

தமிழ்மணம் தளத்தில் ஏன் உங்கள் பதிவுகள் தெரிவதில்லை ?

அசரீரி (Fatheek) said...

//கிழக்கின் கவிதை மொழியிலிருந்து உங்களை விடுவித்துக் கொண்டு மிகச் சிறப்பான எதிர்காலத்தைக் கட்டியம் கூறியவாறு கவிதையை எழுதியுள்ளீர்கள்// பஹீமா ஜஹான் என்ன சொல்ல வருகிறார் பர்ஸான்.
கிழக்குக்கான கவிதை மொழி என்று எதை அவர் வரையறுக்க வருகிறார்? அப்படி அவர் எண்ணிக் கொண்டிருக்கும் வகைப்படுத்தலிலுள்ள கவிதைகள் தாண்ட முடியாத எல்லைக்குள் நிற்பனவா? அது எவ்வாறானது என்பதை சற்றுக் கொஞ்சம் தெளிவாகச் சொல்ல முடியுமா பஹீமா ஜஹான்?

ஃபஹீமாஜஹான் said...

"கிழக்குக்கான கவிதை மொழி என்று எதை அவர் வரையறுக்க வருகிறார்?

கிழக்கிலிருந்து சிறந்த கவிஞர்கள் உருவாகியிருக்கிறார்கள்.ஆனால்
தற்காலத்தில் எழுதும் சிலரது கவிதைகள் இன்றைய கவிதைகளின் செல்நெறியுடன் இணையாமல் கிழக்கில் முனைப்புப் பெற்ற ஒரு வடிவத்திற்குள் இருப்பதை உணரமுடிகிறது.

"அப்படி அவர் எண்ணிக் கொண்டிருக்கும் வகைப்படுத்தலிலுள்ள கவிதைகள் தாண்ட முடியாத எல்லைக்குள் நிற்பனவா?"

நிச்சயம் தாண்ட முடியும் -தேடல் மிக்கவர்களாக மாறும் பொழுது.
பஹீமாஜஹான்

அசரீரி (Fatheek) said...

//ஆனால் தற்காலத்தில் எழுதும் சிலரது கவிதைகள் இன்றைய கவிதைகளின் செல்நெறியுடன் இணையாமல் கிழக்கில் முனைப்புப் பெற்ற ஒரு வடிவத்திற்குள் இருப்பதை உணரமுடிகிறது.//
கிழக்கில் முனைப்புப் பெற்ற வடிவம் என எதைச் சொல்ல வருகிறீர்கள் பஹீமா ஜஹான்? அதை இன்னும் தெளிவாகச் சொல்வது மயக்கம் தராது என நினைக்கிறேன்.. ஏனெனில் நீங்கள் சொல்வது போல தேடல் பற்றியோ நவீனம் பற்றியோ எந்த விதமான உணர்வுமே இல்லாமல், தாண்டவேமாட்டோம் என்ற உறுதியான முடிவுடன் வைக்கோல் கட்டில் படுக்கும் சிலரைக் கொண்டு மாத்திரம் நீங்கள் கிழக்கின் கவிதையை இனங்கண்டுவிடக் கூடாது என விரும்புகிறேன்..
அத்தோடு நீங்கள் சொல்வதை விடவும் சிறப்பான தேடலுள்ள தலைமுறையின் பங்களிப்பு தொண்ணூறுகளின் பின்னிருந்து மறுக்க முடியாத முனைப்புடன் செயற்பட்டு வருவதையும், அது நமது மொழிக்கான கோஷத்தை வலுவாக்கிக் கொண்டிருப்பதையும் கவனத்தில் கொண்டேயாக வேண்டும்.

//நிச்சயம் தாண்ட முடியும் -தேடல் மிக்கவர்களாக மாறும் பொழுது.//
இந்த உண்மை தாண்ட முடியாத அதிகாரத்துக்குள்ளிருக்கும் அனைத்துக்கும்தான்..

farzan abdul razeek said...

**கிழக்கின் கவிதை மொழியிலிருந்து உங்களை விடுவித்துக் கொண்டு..**பஹீமா..

-- என்னால் எழுதப்படுபவைகள் தாமாக வேறு மொழியில் அகப்பட்டுக் கொள்கின்றன என்றுதான் நினைக்கிறேன்.
ஊர்ந்து செல்லும் அருவி சில இடங்களில் வேகமாகலாம். வேகமாக சென்ற அருவி சில இடங்களில் ஊர்ந்தும் செல்லலாமல்லவா? இதற்கு என்ன காரணம்?.
அருவியா?/அருவியின் பாதையா?/ வேறு ஏதுமா?..மொழிக்காக நாமல்ல விரும்பினால் எந்த மொழியும் நமக்கே.. அச்சம் தரும் மொழிகளைத்தவிர.

1. **கிழக்குக்கான கவிதை மொழி என்று எதை அவர் வரையறுக்க வருகிறார்?**
2. **அப்படி அவர் எண்ணிக் கொண்டிருக்கும் வகைப்படுத்தலிலுள்ள கவிதைகள் தாண்ட முடியாத எல்லைக்குள் நிற்பனவா?**அசரீரி..

ஆம், கிழக்கின் கவிதை மொழி என்ற சட்டமெல்லாம் மெளத்தாகி விட்டதே. அந்த வகைப்பாடுகள் இன்றைய எங்களிடம் இல்லாமல் ஆகிவிட்டன என்றுதான் நண்பர்களே நினைக்கிறேன். ஆனால் எனது மண் இன்றும் எனக்குத்தானே சொந்தம். எனது அடையாளம் முஸ்லிம் தேசம் சார்ந்து இருப்பினும் அதற்கு நில எல்லைகள் ஒரு வரையறையல்லவே.. நமக்கு ஏற்படும் தாக்கம் கரீபியன் கடற்கரைமொழியோடும் ஓப்பாகி நிற்கலாமல்லவா?
உரையாடுவோம்,

பர்ஸான்.ஏஆர்.

எனது வலைத்தளமும் நானும்

My photo
Addalaichenai, South East, Sri Lanka
இந்த வலைத்தளங்களினூடாய் பொதுப்பார்வைக்கு எனது செயற்பாடுகளையும் இணைத்துக் கொள்கிறேன். அதி வேகமான வாழ்கைக்குள்ளும் எனது உலகினுள் வருகை தந்தமைக்கு ஜஸாகல்லாஹ் என்பதுடன் வரவேற்கிறேன். தொடர்ந்து உரையாடுவோம்..