Monday, June 9, 2008

இரண்டு தடவைகள் வாழ்கிறாய்

















அனைத்து சலனங்களினையும் அடக்கி
என் மூச்சைத் திருடி
நீ அதிர்வுகளோடு எழுந்து போனாய்.

இப்படியிருக்காது என்ற என் ஆசைகள் மீது
உன் ஆளுமையும் அதிரவைக்கும் விம்பல்களும்
உருக்குலைய வைத்து
என்னை சாகடித்துக் கொண்டே இருக்கிறது.

உன்னை முதலினைப்படுத்தி
என்னை விட உன் மகிழ்விற்கே இவையெல்லாமென
பல கோடி தடவை கெஞ்சினேன்.

உன் அசட்டுக் காதுகளும்
உன்னிலைகளே அனைத்தும் என்ற கனவுகள்
என் உடலின் இரு அந்தங்களிலும்
மீசான் கட்டைகளை செருகி விட்டது.

எனக்கேயான எனது அனைத்தினையும் மறுத்தாய்.
உன் பிடிவாதங்கள் நிறைந்த உலகில்
நீ இட்டுள்ள உறுதியான உனது நிலைகளில்
என்னையும் ஓடவிட்டு
நீ வாழ்வதை பார்த்துக் கொண்டிருக்கிறாய்.

நீ உலகில்
இரண்டு தடவைகள் வாழ்கிறாய்.

09.06.2008

3 comments:

ஜமாலன் said...

”நீ உலகில்
இரண்டு தடவைகள் வாழ்கிறாய்.”

கார்ல் மார்க்ஸ் கூறியதுபொல.. உலகின் எல்லா நிகழ்வுகளும் வரலாற்றில் இரண்டு தடவைதான் நடக்கிறது. முதலில் வரலாறாக பிறகு அபத்தமாக..

மீசான் கட்டைகளுக்கு அருஞ்சொற்பொருள் இறுதியில் தருவது நல்லது.

சித்தாந்தன் said...

வலிகள் நிறைந்த வரிகள் பர்ஸான்

புறக்கணிப்புக்களும் நம்பிக்கையீனங்களுமாகத்தானே இங்கு வாழ்க்கையிருக்கிறது

பர்ஸான்.ஏஆர் said...

மீளவும் வாசிக்கையில் அர்த்தங்கள் அகலமாய் விரிகின்றன.

எனது வலைத்தளமும் நானும்

My photo
Addalaichenai, South East, Sri Lanka
இந்த வலைத்தளங்களினூடாய் பொதுப்பார்வைக்கு எனது செயற்பாடுகளையும் இணைத்துக் கொள்கிறேன். அதி வேகமான வாழ்கைக்குள்ளும் எனது உலகினுள் வருகை தந்தமைக்கு ஜஸாகல்லாஹ் என்பதுடன் வரவேற்கிறேன். தொடர்ந்து உரையாடுவோம்..